காரி துப்பியும் புத்தி வரல… உங்களுக்கு ஆஸ்கர் வேற தரனுமா..? பிரபல இயக்குநரை வெளிப்படையாக திட்டிய பிரகாஷ் ராஜ்!!

Author: Babu Lakshmanan
7 February 2023, 5:13 pm
Quick Share

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். வில்லனாக நடித்து தமிழக மக்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். அந்தப் படத்தில் அசால்டாக நடித்து மக்களிடையே பாராட்டுக்களை பெற்றார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிப்பில் கவனம் செலுத்தி கொண்டிருந்தாலும் இந்திய அரசியலில் நிகழும் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக பாஜக-விற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

அண்மையில், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு வரவேற்பு தெரிவித்த பாஜகவினர், பதான் படத்தில் தீபிகா படுகோன் அணிந்திருந்த காவி நிறத்திலான பிகினிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் பதான் படங்கள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது :- பதான் படத்தை தடை செய்ய விரும்பினார்கள். ஆனால் அப்படம் ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தை எதிர்த்தவர்களால் மோடியின் பயோபிக் படமான பிஎம் நரேந்திர மோடி என்கிற திரைப்படத்திற்கு ரூ.30 கோடி கூட கலெக்‌ஷனை பெற முடியவில்லை.

Prakashraj updatenews360

அதேபோல் காஷ்மீர் பைல்ஸ் என்கிற பிரச்சார படம் ஒன்றை எடுத்து வெளியிட்டனர். அந்த படத்தை பார்த்த சர்வதேச கலைஞர்கள் காரி துப்பினர். அப்படி இருந்தும் இவர்களுக்கு புத்தி வரவில்லை. இதில் காஷ்மீர் பைல்ஸ் படத்துக்கு ஆஸ்கர் கொடுக்கவில்லை என அதன் இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி கவலைபட்டாராம். இந்த மாதிரி படத்துக்கெல்லாம் ஆஸ்கர் இல்ல பாஸ்கர் விருது கூட கிடைக்காது, எனக் கூறியுள்ளார்.

Views: - 152

1

0