“சூர்யாவுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்க வேண்டும்”- நடிகர் ராதாரவி ஆவேசம் !

21 September 2020, 7:21 pm
Quick Share

ஒரு வாரத்திற்கு முன் தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் தொடர்ந்து மூன்று மாண, மாணவிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் தேர்வெழுதப்‌ போகும்‌ மாணவர்களுக்கு ‘வாழ்த்து’ சொல்வதற்குப் பதிலாக ‘ஆறுதல்‌’ சொல்வதைப் போல அவலம்‌ எதுவுமில்லை, நீட் தேர்வு இனி நடக்க கூடாது” என்று உருக்கமான அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கை பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

அரசியல்வாதிகள் முதல் திரையுலகினர் வரை பலர் இந்த அறிக்கையை பாராட்டினாலும் பாஜகவினர் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், பழம்பெரும் நடிகரும் சமீபத்தில் பாஜகவில் இணைந்தவருமான ராதாரவி சூர்யா குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது ’நீட்தேர்வு மட்டுமின்றி பல விவகாரங்களில் சூர்யா,

அடிப்படை சாராம்சம் கூட தெரியாமல் பேசி வருவதாக குற்றம் சாட்டி உள்ளார். முழு விவரங்கள் தெரியாமல் பேசுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 10

0

0