80ஸ், 90ஸ்களில் தொடங்கி உலகநாயகனாக திரையுலகில் திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
என்ன தான் தற்போது அரசியல், நடிகர் என மதிக்கத்தக்க அளவிற்கு இருந்தாலும், ஆரம்ப காலகட்டங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கி வந்த இவரது பெயர், பல நடிகைளுடன் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், சில நடிகைகளுடன் காதல், லிவிங் டு கெதர் என ஒரு பிளேபாய் ரேஞ்சிற்கு இவரது பெயர் பேசப்பட்டது. கமல் ஹாசன் என்றாலே சர்ச்சைக்கு பேர் போனவராக அந்த காலத்தில் இருந்தே தோன்றி வருபவர்.
இந்நிலையில், தற்போது இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. கமலின் அரசியல் பார்வை குறித்து நடிகர் ராதாரவி ஒரு பேட்டியில் மிகவும் மோசமாக கலாய்த்து தள்ளி உள்ளார். அந்த பேட்டியில், ரஜினியை அரசியலுக்கு பொருத்தம் இல்லாதவர் என்றும் கமல்ஹாசன் தலைவனாக இருக்க தகுதியே இல்லாதவர் என்றும் தெரிவித்து உள்ளார்.
மேலும் பேசுகையில், கமல்ஹாசன் ஒரு அதிமேதாவி என்றும் இவர் சந்திர மண்டலத்தையே தொட்டவர் என்றும், எல்லாம் தெரிந்தவர் போல பேசுவாரே தவிர ஒரு தலைவனாக இருக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் என்று கடுமையாக விமர்ச்சித்து உள்ளார்.
முன்னதாக சரத்குமார் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது ராதாரவி செயலாளராக இரு சமயத்தில் கணக்கு வழக்கு சரியில்லை என்றால் வேற தலைவனை மாற்றுவோம் என கமல்ஹாசன் தெரிவித்த சமயத்தில் விஷாலின் பக்கம் கமல்ஹாசன் துணை நின்று உள்ளார்.
ஆனால் தற்போது விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் நடிகர் சங்கத்திலும் கணக்கு வழக்கு சரியில்லை என்று தெரிவித்து இருகிறார்கள். அதையும் கமல்ஹாசன் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும் என கமலை சாடி உள்ளார் ராதாரவி. இப்படி இருக்கும் கமல்ஹாசன் எப்படி ஒரு நல்ல தலைவனாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வியும் ராதாரவி எழுப்பி உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.