ரகுவரன் எனும் நடிப்பு அரக்கனை அடியோடு சாய்த்த சினிமா…. அவரை கொன்றது யார் தெரியுமா?

வில்லன், ஹீரோ, குணசித்திரம் என எந்த ரோல் கொடுத்தாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி திறமையால் மக்களை வியக்க செய்தவர் நடிகர் ரகுவரன். இவர் கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்து தந்தையின் தொழிலுக்காக தமிழ்நாட்டில் குடும்பத்தோடு குடிபெயர்ந்தார்.

நல்ல உயரம், தோற்றம் என கம்பீரமாக இருந்த ரகுவரனுக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.அதை தொடர்ந்து கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடித்த படம் மாபெரும் ஹிட் அடித்து யார் இந்த நடிப்பு அரக்கன் என உலகம் முழுக்க உள்ள ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.

தமிழ் மட்டும் இன்றி இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தனது முதல் மலையாள திரைப்படமான “காக்கா” என்ற படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ரோஹிணியை காதலித்து 1996ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் இருக்கிறான். அதன் பின்னர் ரோகினி உடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் அவரை 2004ம் ஆண்டு விவாகரத்து செய்துபிரிந்துவிட்டார். விவாகரத்துக்கு பின் அவர் மிகவும் தனிமையில் வாடினாராம்.

அந்த நேரங்களில் சரியாக படங்களில் கூட கவனம் செலுத்தாததால் சில ஆண்டுகள் கேப் விழுந்துள்ளது. அந்த நேரத்தில் தனிமையை போக்க குடிபோதைக்கு அடிமையாகி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஒரு முறை சிக்கனலில் ஒரு சிறுவன் பிச்சை எடுப்பதை பார்த்து, இது தன் மகனோ? தான் மனைவியையும் மகனையும் விட்டுசென்றதால் தான் இந்த நிலைக்கு வந்திட்டேனோ? என்றெல்லாம் பயந்து போன் பண்ணி விசாரித்தாராம். அந்த அளவிற்கு தனிமை அவரை மனரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது. இதனிடையே போதை பழக்கத்திற்கு அடிமை ஆனதால் உடல்ரீதியாக பிரச்சனை ஏற்பட்டு நலிவிழந்து 2008ம் ஆண்டு மறைந்துவிட்டார்.

Ramya Shree

Recent Posts

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

27 minutes ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

1 hour ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

2 hours ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

3 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

3 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

3 hours ago

This website uses cookies.