கே பாலச்சந்தரின் “அவள் ஒரு தொடர்கதை” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமான ராஜேஷ், “கன்னிப் பருவத்திலே” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். “மகாநதி”, “தர்மதுரை” ஆகிய திரைப்படங்களில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமா மட்டுமல்லாது “ஓம் சரவண பவ” என்ற யூட்யூப் சேன்னலையும் நடத்தி வந்தார். மேலும் ரியல் எஸ்டேட், ஹோட்டல் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை உடல் நிலை சரியில்லாமல் போக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் மரணச் செய்தி தமிழ் சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது இறப்பிற்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் ராஜேஷின் கடைசி ஆசை குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ராஜேஷ் கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். ஆனால் அவரால் கடைசி வரை அந்த ஆசையை நிறைவேற்ற முடியவில்லையாம். இவர் கமல்ஹாசனுடன் “மகாநதி”, “விருமாண்டி” ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.