நண்பர் விவேக் மீண்டு வரவேண்டும் : எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டும் ரஜினிகாந்த்..!!

16 April 2021, 8:48 pm
rajini - vivek - updatenews360
Quick Share

சென்னை : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் விரைந்து குணமடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது இதய செயல்பாட்டை சீராக்க, தற்போது எக்மோ கருவியின் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நடிகர் விவேக் விரைந்து குணம் பெற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், “நண்பர் அவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்,” என நடிகர் ரஜினிகாந்த் டுவிட் போட்டுள்ளார்.

Views: - 126

1

0