“Hi kanna, நான் ரஜினி பேசுறேன்..” Phone போட்ட ரஜினி, கண்கலங்கிய புகழ் !
Author: Babu Lakshmanan14 November 2021, 10:14 am
விஜய் டிவி மூலம் பிரபலமாகி அதன்பின் சினிமாவிற்கு காலடி எடுத்து வைப்பது இப்போது டிரெண்ட் ஆகி விட்டது. அந்த வகையில் திவ்யதர்ஷினி, ரம்யா, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, சிவகார்த்திகேயன், சந்தானம், தீனா இவர்களெல்லாம் விஜய் டிவி மூலம் பிரபலமடைந்து அதன்பின் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர்கள்.
இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் மிக பெரிய வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், பாலா 2 பேருமே கலந்துகொண்டு பலரையும் சிரிக்க வைத்தார். இப்போது புகழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். அமேசான் ப்ரைமில் வெளியான LOL நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் புகழ்.
இந்நிலையில் தனியார் கடை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன். சந்தானம் அண்ணனுடன் 2 படங்கள் நடித்துள்ளேன், வலிமையில் நடித்துள்ளேன் அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இவருக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார் அதில் “லவ் யூ புகழ், உன் பிறந்தநாளுக்கு கடவுள் ஆசீர்வதிக்கட்டும்..” என்று கூற புகழுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை அதை உடனே தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
அதற்கு Caption ஆக,”என் வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்தநாள் இது. என் தலைவன் வாழ்த்துக்களோட இந்த நாள நான் தொடங்கறேன். திரை உலகிற்கு வருவதற்கே அவர் ஒரு ரோல் மாடல் எனக்கு. அப்படி அவர பார்த்து ரசிச்சு வளர்ந்த எனக்கு அவர் வாயால வாழ்த்து சொல்லி இருக்கிற மகிழ்ச்சிய எப்படி வெளிப்படுதறதுனு தெரியல. இப்படி ஒருநாள் என் வாழ்க்கைல வரும் னு நான் கனவுல கூட நினைச்சு பார்த்தது இல்லை. நான் எந்த இடத்துக்கு போனாலும், அவருக்கு இருக்கிற ரசிகர்கள்ல நானும் ஒருத்தன் அது தான் எனக்கு பெருமை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அன்பும், நன்றிகளும் மக்களே..என்று நெகிழ்ச்சியுடன் போட்டுள்ளார்.
34
2