தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். அவரது ஸ்டைல், பேச்சு, நற்குணம் என அனைத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை பெரிய ரசிகர் படையே உள்ளது. 80ஸ்கள் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. இந்நிலையில், ஒய்ஜி மகேந்திரன் தயாரிக்கும் சாருகேசி திரைப்படத்தின் அறிவிப்பு விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், ஒய்ஜிக்கு சினிமாவை விட நாடகம் தான் முக்கியம். எனது மனைவியை அறிமுகப்படுத்தி வைத்து எனக்கு திருமணம் நடக்க காரணமானவர் ஒய்.ஜி மகேந்திரன். அதனால் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இது குடும்ப விழா என்பதால் இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன்.
எனக்கு 73 வயது ஆகிறது. ஆனாலும் நான் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்க காரணம் எனது மனைவி லதா தான். நடத்துனராக வேலை பார்த்த போது நிறைய கெட்டபழக்கங்கள் இருந்தன. தினமும் மட்டன் தான் சாப்பிடுவேன். குடி, சிகரெட் என கணக்கில்லாமல் எடுத்துக்கொள்வேன். நடத்துனராக வேலைபார்த்தபோதே அப்படியென்றால், பணம், புகழ் வரும்போது எப்படி என நீங்களே நினைத்துப் பாருங்கள்” எனக் கூறினார்.
மேலும், “காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65 தான் சாப்பிடுவேன். மது, சிகரெட், அசைவம் மூன்றையும் அளவுக்கு மீறி தொடர்ந்து பல வருஷங்கள் எடுத்துக்கொண்டவர்கள் எனக்கு தெரிந்து 60 வயதுக்கு மேல் ஆரோக்கியமாக வாழ்ந்தது கிடையாது. இதற்கு நிறைய பேரை என்னால் உதாரணம் சொல்ல முடியும். அந்த மாதிரி இருந்த என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா. என்னை ஒழுக்கமிக்கவனாக மாற்றி, என்னை வாழவைத்தது அவர் தான்” என கூறிய ரஜினியின் நெகிழ்ச்சியான பேச்சு வைரலாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.