ரஜினிகாந்த் என்ற வார்த்தையை கேட்டாலே எளிமை என்ற வார்த்தையும் கூடவே வந்துவிடும். புகழின் உச்சத்தில் இருந்தாலும் மிகவும் எளிமையை கடைப்பிடிப்பவர் ரஜினிகாந்த் என்று அவருடன் பழகிய பல பிரபலங்கள் கூறுவது வழக்கம்.
ஆனால் ரஜினிகாந்தின் பெருந்தன்மையை வெளிக்காட்டுவது போன்ற ஒரு சம்பவத்தை குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம். அதாவது ஒரு காமெடி நடிகருக்காக தன்னுடைய படப்பிடிப்பையே நிறுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.
அதாவது ஒரு திரைப்படத்தில் ரஜினிகாந்தும் கவுண்டமணியும் இணைந்து நடித்துக்கொண்டிருந்தார்களாம். அந்த சமயத்தில் ஒரு நாள் கவுண்டமணி அவர் ஒப்பந்தமான மற்ற திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கும் செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்தாராம்.
அந்த நாள் ரஜினிகாந்த் இடம்பெறும் காட்சி ஒன்றை படமாக்கிக்கொண்டிருந்தார்களாம். கவுண்டமணி படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்ததும் ரஜினிகாந்த் படப்பிடிப்பை அப்படியே நிறுத்தச் சொல்லிவிட்டு, “என்னுடைய காட்சியை அப்புறம் எடுத்துக்கொள்ளலாம். கவுண்டமணி இடம்பெறும் காட்சிகளை இப்போது எடுத்துவிடுங்கள்” என்று கூறினாராம். ஏனென்றால் அக்காலகட்டத்தில் கவுண்டமணி மிகவும் பிசியாக இருந்ததால் அவரது கால்ஷீட் கிடைப்பது அரிது என்பதால் இதனை புரிந்துகொண்ட ரஜினிகாந்த் அவ்வாறு செய்யச்சொன்னாராம். இத்தகவலை டாக்டர் காந்தராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கோயில்களின் நகரம் என சிறப்பு பெற்ற காஞ்சியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோயிலில்…
இன்றைய காலக்கட்டங்களில் ஓரினச்சேர்க்கை என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதற்கு இந்திய சட்டம் அங்கீகரிக்காவிட்டாலும், இரு பெண்கள் ஒன்றாக வாழ்வது,…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாகவும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி…
ஆதங்கத்தை கொட்டிய ரவி மோகன் நடிகர் ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து பிரிந்த செய்தியை நாம் அறிந்திருப்போம். ஆர்த்தியின் தாயார்…
கோவை வெள்ளலூரில் நடந்த கல்லூரி மாணவர் கொலையில் காதலியை தட்டி பறித்த ஆத்திரத்தில் போதை ஊசி செலுத்தி கொன்றதாக கைதானவர்கள்…
நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தது முதல் அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் வருகிறது, இரு…
This website uses cookies.