மகளின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி… தனுஷுடனான பிரிவுக்கு பிறகு ஐஸ்வர்யாவுக்கு கிடைத்த முதல் ஆறுதல்…!!

Author: Babu Lakshmanan
17 March 2022, 5:15 pm
dhanush rajini - aishwarya - - updatenews360
Quick Share

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். திரைத்துறையில் தந்தை ரஜினியும், கணவன் தனுஷும் உச்சத்தில் இருக்கும் வேளையில், ஐஸ்வர்யாவும் தனது பங்கிற்கு இயக்கநராக அவதாரம் எடுத்து வந்தார்.

2012-ல் கணவன் தனுஷை வைத்து 3 என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். இதைத் தொடர்ந்து, வை ராஜா வை என்னும் படத்தையும் இயக்கினார்.

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் தனுஷும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். இது திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தந்தையான ரஜினியும் ஆடிப்போய் விட்டார். இதையடுத்து, தனுஷ் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். மகளின் வாழ்க்கையை நினைத்து ரஜினி மிகவும் நொந்து போனதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஐஸ்வர்யா தனது கவனத்தை திருப்ப, மியூசிக் வீடியோ இயக்குவதில் நாட்டம் செலுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் இப்பாடல் உருவாகியுள்ளது. தமிழில் இதற்கு பயணி எனப் பெயரிடப்பட்டுள்ளது. அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடியுள்ளனர்.

Aishwarya Dhanush pens memoir on her life as Superstar Rajinikanth's  daughter

இந்தப் பாடலை நடிகரும், தந்தையுமான ரஜினி இன்று வெளியிட்டார். இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “எனது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பயணி’ பாடலை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி. 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக களம் கண்ட அவர் வெற்றி பெற வேண்டுகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 539

0

0