SPB-க்கு கண்கள் கலங்க இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்…!

25 September 2020, 3:26 pm
Quick Share

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சுமார் 16 மொழிகளில் சுமார் நாற்பது ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி உள்ளார்.எம்ஜிஆர் சிவாஜி காலம் முதல் நகுல், சாந்தனு வரை எல்லோருக்கும் பின்னணியில் பாடியுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் ரஜினி படங்களில் ஓப்பனிங் பாடல்கள் பாடுவது வழக்கம். அவர் ரஜினி படத்தின் Opening Song பாடவில்லை என்றால் ரஜினி படங்கள் வியாபாரத்தில் தோற்கும் என்ற பிம்பம் கூட இருக்கிறது.

இந்தநிலையில், இன்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சற்று முன் மரணம் அடைந்தார். இது குறித்த பல திரைப் பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். SPB மரணம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உடனே தனது டுவிட்டர் வலை தளம் மூலம், ” பிரபல பாடகர் எஸ் பி பி அவர்கள் சிறந்த பாடகர் மட்டுமல்ல நல்ல மனித நேயம் கொண்டவர் அவரது குரல் நாள்தோறும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இவருக்கு முன் தமிழ் சினிமாவில் இருந்த பின்னணி பாடகர்கள் யாருக்கும் இல்லாத ஒரு சிறப்பம்சம் எஸ்பிபி அவர்களுக்கு கிடைத்தது. இவருக்கு முன் இருந்த பாடகர்கள் எல்லாம் அவர்களின் மொழியை தாண்டி வெளி மொழிகளில் பாடவில்லை. ஆனால் எஸ்பிபி 16 மொழிகளில் பாடியுள்ளார். அவர் மிகப்பெரிய மகான், அவரது ஆத்மா சாந்தியடைய எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.