நடிகர் சூர்யாவுடன் மோதும் சசிகுமார்!!- அதிரடி சரவெடி confirm

Author: kavin kumar
21 October 2021, 3:55 pm
Suriya_Sasikumar_TamilCinema
Quick Share

தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார் . இவர் அப்படத்தில் ‘பரமன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் . முதல் படமே ஹிட் கொடுத்த நடிகர் சசிகுமார் , மக்கள் மனதில் நல்ல இயக்குனராக மட்டுமில்லாமல் நல்ல நடிகராகவும் பெயர் பெற்றார் . தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கிய சசிகுமார் தற்போது வரை தனது மார்க்கெட்டை தக்கவைத்துக்கொண்டுள்ளார் . சில தினங்களுக்கு முன்பு நடிகர் சசிகுமார் மற்றும் ஜோதிகா , சமுத்திரக்கனி இணைத்து நடித்த “உடன்பிறப்பே” படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியது . இது எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை சுமாரான படம் என்ற விமர்சனங்களையே பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள “எம்ஜிஆர்மகன் ” படம் தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ‘சத்யராஜ்’ , ‘சரண்யா பொன்வண்ணன்’, ‘மிருணாளினி ரவி’, ‘சிங்கம்புலி’ ஆகியோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது .

நடிகர் சூர்யா சமீபத்தில் நடித்து தீபாவளியன்று வெளியாக உள்ள படம் “ஜெய் பீம்” . இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது . தற்போது இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது . அடுத்தடுத்து நடிகர் சூர்யா பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டுள்ளார். நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் கொடுக்க அந்த வரிசையில் “ஜெய் பீம்” படமும் வெற்றிப்படமாகவே அமையும் என நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .

சசிகுமார் நடிப்பில் “எம்ஜிஆர்மகன் ” , சூர்யா நடிப்பில் ” ஜெய் பீம்” ஆகிய இரு படங்களும்
இந்த தீபாவளியன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமாரின் களமிறங்குவது இதுவே முதல் முறை . பொதுவாக திரையரங்குகளில் பெரிய நடிகர்களில் படங்கள் பண்டிகை தினங்களில் மோதிக்கொள்வது இயல்பு , ஆனால் தற்போது திரையரங்குகள் போய் ஓடிடி தளங்களிலும் நடிகர்களின் படங்கள் மோதிக்கொள்வது சினிமாரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 341

1

0