“கண்ணா லட்டு தின்ன ஆசையா” பட ஹீரோ டாக்டர் சேது மாரடைப்பால் திடீர் மரணம் – அதிர்ச்சியில் கோலிவுட் !

27 March 2020, 12:01 am
Quick Share

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் ஹீரோவாக நடித்த சேது ஒரு மருத்துவர், இவர் அந்த வெற்றி படத்திற்கு பிறகு வாலிப ராஜா என்ற படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெறாமல் போகவே, நடிப்பிற்க்கு Good Bye கூறிவிட்டு தனது மருத்துவ வேலையை பார்க்க ஆரம்பித்தார், அதன் பிறகு மீண்டும் சந்தானம் அழைத்ததன் காரணமாக சக்க போடு போடு ராஜா படத்தின் செகண்ட் ஹீரோவாக நடித்தார். ஆனால் இவரின் துர் அதிர்ஷ்டம் அந்த படமும் வெற்றி பெறவில்லை.

இவரின் யூ ட்யூப் சேனல் பேட்டிகள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் பிரபலம். ஆனால் இன்று மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என நடிகர் Metro பட ஹீரோ சுரேஷ் அவர்கள் டிவிட் செய்துள்ளார்.

தனது முதல் பட வெற்றிக்கு பிறகு பயங்கர மகிழ்ச்சியில் இருந்த சேதுவிற்க்கு போதுமான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை என்கிற வருத்தத்தில் இருந்த இவரின் ஆருயிர் நண்பரான சந்தானம் தற்போது என்ன செய்வாரோ ?