தமிழ் சினிமா நடிகர்களில் 40 வயதை தாண்டியும் கல்யாணம் செய்யாமல் முரட்டு சிங்கிள் என்று சொல்லி ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில், ரொம்ப பழைய பீசான பிரேம்ஜிக்கு கூட சில தினங்களுக்கு முன்பு திருமணம் ஆகிவிட்டது. இதனால், அடுத்தது சிம்பு மற்றும் விஷால் போன்றவர்கள் எப்ப தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வருகிறது. விஷால், ஒரு பக்கம் நடிகர் சங்க கட்டிடத்தில் தான் என் கல்யாணம் நடக்கும் என்று இந்த கேள்விக்கு விடை சொல்லிவிட்டார்.
ஆனால், சிம்பு எந்த கேட்டகிரியில் இருக்கிறார் என்றே தற்போது வரை தெரியவில்லை. அவருடைய, அப்பா டி ராஜேந்தர் மீடியா முன்பு தன் மகனுக்கு கல்யாணம் ஆகாமல் இருப்பது தனக்கு பெரும் வருத்தத்தை கொடுத்து இருப்பதாகவும் வெளிப்படையாக கூறிவிட்டார். அப்படி, அவருடைய அப்பா வெளிப்படையாக பேசி எந்த ரியாக்ஷனும் தற்போது வரை சிம்புவிடம் இருந்து வரவில்லை.
தொடர் காதல் தோல்வி அடைந்தால் சிம்பு திருமணமே வேண்டாம் என்று இருக்கிறாரா என்ற கேள்விகள் கூட பலரிடையே, எழுந்து வருகிறது. அவ்வப்போது, சிம்பு சில நடிகைகளுடன் சேர்த்து வைத்து பேசப்பட்டாலும், எல்லோருக்கும் தெரிந்த உறுதியான காதல் என்றால் அது நயன்தாராவுடன் தான். கிட்டத்தட்ட திருமணம் வரைக்கும் வந்து இந்த காதல் தோல்வி அடைந்தது.
பல மேடைகளில் இந்த தோல்வியை பற்றி சிம்புவே வெளிப்படையாகவும் பேசியிருந்தார். அதன் பிறகு, ஹன்சிகாவுடன் குறுகிய கால காதலும் இருந்தது. அந்த காதல் தோல்வி அடைந்த பிறகு தான் சிம்பு ஆன்மீகத்துக்கு போகிறேன் என காவி சட்டை போட்டுக் கொண்டு எல்லாம் போனார். அதன் பிறகு உடல் எடை போட்டு ஷூட்டிங்கிலும் கலந்து கொள்ள முடியாமல் மொத்தமாக பெயரையும் கெடுத்துக் கொண்டார். தற்போது இழந்த பெயரை திரும்ப வாங்க மீண்டும் பீனிக்ஸ் பறவையாக சிம்பு களம் இறங்கி தற்போது, அவருக்கு வெற்றியும் கிடைத்துக் கொண்டு வருகின்றது.
இந்நிலையில், சிம்பு அடுத்தடுத்து படங்களில் பிஸியா நடித்து வருகிறார். அதாவது, மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் தயாராகி வரக்கூடிய Thug life படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இதன்பின்னர் STR 48 திரைப்படம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை கதையாக கொண்டு ஒரு ஆக்சன் டிராமா திரைப்படமாக தயாராக உள்ள நிலையில், அப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. அண்மையில், படத்தை தயாரிப்பதில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பின் வாங்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு அந்நிறுவனத்தின் தரப்பினர் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், இப்படங்களை தொடர்ந்து தனது அடுத்த படத்திற்காக பிரபல மலையாள இயக்குனர் ஜூட் அந்தோணி ஜோசப்புடன் சிம்பு இணை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மிகப்பெரிய பொருட்களில் பான் இந்தியா திரைப்படமாக தயாரிக்க தில்ராஜு ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் உள்ளிட்ட தயாரிப்பாளர்களுடன் நடிகர் சிம்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.