இக்கட்டான சூழ்நிலையில் நெல்சன்…! பிரபல நடிகரால் சிம்புவுக்கு பறிபோகும் வாய்ப்பு..?

Author: Rajesh
15 February 2022, 12:01 pm
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உருவெடுத்து இருப்பவர் தான் நெல்சன் திலீப்குமார்.
இவரின் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே, ரஜினிகாந்தை இயக்கு வாய்ப்பை பெற்றுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

மேலும் இந்தப் படத்தில் மற்றொரு கதாபாத்திரம் இருக்கிறதாம். அதில் நடிக்க நடிகர் சிம்புவுக்கு தான் கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் நெல்சன் நடிகர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்கியுள்ளார். மேலும் இருவரும் பல வருடங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

இதனால் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பார் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பரவியுள்ளது. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நெல்சனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். மேலும் சிம்பு நடித்த வேட்டை மன்னன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.

இதனால் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஒரு தகவலும் பரவி வருகிறது. இதனிடையே இருவரும் தீவிர ரஜினி ரசிகர்கள், இந்நிலையில் நெல்சன் தனக்கு நெருக்கமான இந்த இரண்டு பேரில் யாரை ரஜினி படத்தில் நடிக்க வைப்பார் என்பதை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இக்கட்டான சூழ்நிலையில் தான் நெல்சன் தற்போது இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Views: - 563

0

0