“என் வீட்டு தோட்டத்தில்…” LOCKDOWN – இல் வீட்டிலேயே தோட்டம் வெச்ச சிவகார்த்திகேயன் ! வைரலாகும் வீடியோ !

12 June 2021, 7:28 pm
Quick Share

காவலருக்கு மகனாக பிறந்து, பண்ணாத முயற்சி எல்லாம் எல்லாம் மேற்கொண்டு , பின் சிறிது சிறிதாக தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, இன்று தமிழில் Top 5 முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப் போவது யாரு என்கிற காமெடி நிகழ்ச்சியில் சாதாரண போட்டியாளராக தனது பயணத்தை ஆரம்பித்து, அதில் வெற்றி கண்டு பின் ஜோடி நம்பர் வன் தொகுப்பாளராக மாறினார்,

அதன் பின் அது இது எது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், பின் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இன்று தமிழில் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா, வாழ் என்கிற படங்களை தயாரித்து உள்ளார். இதில் வால் படம் விரைவில் Sony Live OTT – இல் ரிலீஸ் ஆகப்போகிறது.

தற்போது டாக்டர் படத்தை முடித்துவிட்டு, அவர் ‘ அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகளுடன் வீட்டு தோட்டத்தில் இருந்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்,

அதில் “லாக்டவுனுக்கு முன்பு இந்த தோட்டத்தை வெச்சு இருந்தோம், காய்கறிகள் கீரை வகைகளை பயிரிட்டு, இன்னும் இங்கே முழுவதும் ரெடி பண்ணனும் ஆசை, தோட்டம் முழுமை பெற்றதும் மீண்டும் முழுவதையும் காட்டுறன்” என்று தனது வீடியோவில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

Views: - 270

24

1