1000 பேருக்கு இலவச மிதி வண்டிகள் இலவசமாக வழங்கிய நடிகர் சோனு சூட்…

Author: Mari
5 January 2022, 6:32 pm
Quick Share

பிரபல வில்லன் நடிகரான சோனு சூட். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வரும் கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப உதவினார்.

வெளிநாட்டில் சிக்கிக்கொண்ட மாணவர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்கவும் உதவி செய்தார். மேலும் பலருக்கும் பணமாகவும், பொருளாகவும் அவர் செய்த உதவிகள் ஏராளம்.
இதன் மூலம் இந்தியா முழுவதும் அவரை மக்கள் பாராட்டினர். நிஜ ஹீரோ என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளிரன்.

தொடர்ந்து மருத்துவ உதவிகள் மற்றும் பொருளாதார சூழலால் கல்வி கற்க முடியாத மாணவ, மாணவியர் என பலருக்கும ;தனது உதவியைச் செய்தார்.

இந்த நிலையில், நடிகர் சோனு சூட் மற்றும் அவரது சகோதரி இணைந்து பஞ்சாப் மாநிலம் மோகா பகுதியில் உள்ள 45 கிராமங்களைச் சேர்ந்த எட்டு முதல் பன்னிரெண்டு வகுப்புவரை படிக்கும் மாணவிகளுக்கு மதிவண்டி இலவசமாக அளித்துள்ளனர்.

இது குறித்து அவர், தற்போது நிலவி வரும் கடும் குளிரால்; கிராமத்திலிருந்து பள்ளி செல்லவது என்பது சவாலானது. அதனால் அவர்களுக்கு உதவிடும் வகையில் மிதிவண்டிகள் அளித்துள்ளோம் என கூறினார். இந்த செயலுக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 233

1

0