வறுமையால் பாதியில் நின்ற படிப்பு… லாரி கிளீனர் To ஹீரோ – சூரியின் முழு சொத்து எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவில் கூட்டத்தில் ஒருவராக காமெடி காட்சியில் தலைகாட்டியவர் நடிகர் சூரி. மதுரையை சொந்த ஊராக கொண்டு கிராமத்தானாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். 1997முதல் தற்போது வரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

காமெடி நடிகராக நடித்து இன்று ஹீரோவாக கோடிகளில் சம்பளம் வாங்குபவராக சூரி உயர்ந்திருக்கிறார். அதற்காக அவர் மிகவும் உழைத்து தான் இந்த இடத்தை பிடித்துள்ளார். ஆம், தனது உடலை கட்டுமஸ்தான தோற்றத்தில் வைக்க எப்போதும் உடற்பயிற்சி, ஒர்க் அவுட் என கடைபிடித்து ஹீரோவுக்கான தோற்றத்தையும், உடல் அமைப்பையும் வரவைத்துக்கொண்டார். அவரது transformation பல டாப் நடிகர்களையே பிரம்மிக்க செய்தது.

சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். மற்ற எந்த காமெடி நடிகர்களும் இந்த அளவிற்கு உயர்ந்ததில்லை என கோலிவுட்டில் பேசப்படுகிறார். மதுரை மாவட்டம் ராஜாக்கூர் என்ற கிராமத்தில் முத்துசாமி மற்றும் வேங்கையரசி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த சூரி அண்ணன், தம்பி என பெரிய குடும்பத்தில் போதிய வருமானம் இன்றி வறுமையில் வளர்ந்தார்.

தனது அப்பாவால் குடும்பத்தை நகர்த்த முடியாததால் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டார். சூரி 8 வகுப்பு வரை தான் படித்திருக்கிறார். அதன் பின்னர் லாரி கிளீனர் ஆக கூலி வேலை செய்து வந்தாராம். அதன் பின்னர் கொஞ்சம் முயற்சித்து தனது அயராது உழைப்பால் தனக்கிருந்த திறமையை வைத்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக உயர்ந்திருக்கிறார். இவர் சினிமாவில் வளர்ந்த பின்னர் மதுரையில் ” அம்மன் உணவகம்” என ஓட்டல் ஒன்றை ஆரம்பித்து குறைவான விலையில் தரமான உணவை வழங்கி வருகிறார். தற்போது ஹீரோ, தொழிலதிபர் என சிறந்து விளங்கிவரும் நடிகர் சூரியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 40 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இது இவரின் இமாலய வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

Ramya Shree

Recent Posts

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

25 minutes ago

காதல் திருமண விவகாரத்தில் திருப்பம்… எம்எல்ஏ ஜெகன்மூர்த்தியின் ஆதரவாளர் ‘ஸ்வீட்’ குமார் தலைமறைவு!

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…

35 minutes ago

பிச்சைக்காரங்களுக்கு குபேரா பட டிக்கெட் இலவசம்? கவனத்தை ஈர்த்த டிவிட்டர் பதிவு? புதுசா இருக்கே!

பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…

57 minutes ago

முருகர் மாநாட்டுக்கு மனித சங்கிலி நடத்தும் திருமாவளவன் ஏன் வேங்கைவயலுக்கு நடத்தவில்லை? தமிழிசை கேள்வி!

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…

58 minutes ago

கதை நல்லா இருந்து என்ன பயன்? அந்த விஷயத்துல கோட்டை விட்டாங்களே- குபேரா முழு விமர்சனம்

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…

2 hours ago

சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…

3 hours ago

This website uses cookies.