செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு மீண்டும் சிம்பு, AR ரஹ்மான் கூட்டணி – தெறிக்கவிடும் ‘பத்து தல’ போஸ்டர் !

18 January 2021, 7:30 pm
Simbu - Rahman -Updatenews360
Quick Share

Talk Of The Town என்னன்னா சிம்பு உடம்பை குறைத்து, ஷூட்டிங்கில் சரியான நேரத்திற்கு போய் ஈஸ்வரன் ரீலீஸ் ஆனதுதான். 30 நாட்களில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் சிலம்பரசன்.

Chart போட்டு பெண்டிங்கில் இருக்கும் எல்லாம் படங்களையும் முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த இவர், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் மூன்று வருடங்களுக்கு முன்பாக நடிக்க ஒற்றுகொண்ட மப்டி படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் சிம்பு. கன்னட Blockbuster ஆன இந்த படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். இதில் சிம்புடன் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘பத்து தல’ என்று மாஸ் Title வைத்துள்ளார்கள்.

“இனி சிம்பு Time- தான்” என்று Comment அடிக்கும் சிம்பு ரசிகர்களுக்கு இப்போது அவர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக வந்து இறங்கியிருக்கிறது பத்துதல படத்தின் போஸ்டர். பாதி ஷூட்டிங்கில் நின்ற இந்த படம், மீண்டும் படு ஸ்பீடாக துவங்க காத்திருக்கிறார்கள். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்குகிறார். மேலும் செக்கச்சிவந்த வானம் படத்திற்கு பிறகு மீண்டும் சிம்பு AR ரஹ்மான் கூட்டணி இதில் இணைகிறது என்பது கூடுதல் தகவல்.

Views: - 8

0

0