சார்பட்டா பரம்பரை படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு : சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துவதாகவும் கருத்து..!!!

Author: Babu Lakshmanan
29 July 2021, 2:10 pm
surya - aarya - updatenews360
Quick Share

ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் பசுபதி உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் அண்மையில் அமேசான் பிரைமில் வெளியானது. இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குத்துச்சண்டை போட்டியில் இரு தரப்பினர் மோதிக் கொள்வதுடன், சமகால அரசியல் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, அவசர நிலை பிரகடனம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சி கலைப்பு மற்றும் எம்ஜிஆர் ஆட்சிக்கு வருவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கிறது. அரசியல் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தப் படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தப் படத்திற்கு திமுகவினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், எம்ஜிஆர் குறித்த பொய்யான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சார்பட்டா பரம்பரை படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்து டுவிட் போட்டுள்ளார்.

அதில், “சார்ப்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது… வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குனரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்படவைக்கிறது!வாழ்த்துகள்!! ,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 312

0

0