கே.வி.ஆனந்த்தை மறந்த சூர்யா..? இத கூட செய்ய முடிலயா..? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

தமிழ் சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக தனது சிறந்த படைப்புக்களை சினிமாவுலகில் விட்டு சென்றவர் கே.வி.ஆனந்த். ஆரம்ப காலத்தில் கல்கி, இந்தியா டுடே போன்ற பல்வேறு பத்திரிகைகளில் புகைப்பட பத்திரிகையாளராக வேலை செய்தவர். பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் பிரபல ஒளிப்பதிவாளரான பி. சி. ஸ்ரீராம் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

மலையாள படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதும் அப்படம் பெற்றுத் தந்தது. மேலும், கே.வி.ஆனந்த் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். அதிலும், குறிப்பாக ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட படங்களான முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களுக்கு கே வி ஆனந்த் தான் ஒளிப்பதிவு செய்தார் என்பது குறிபிடத்தக்கது.

ஒளிப்பதிவாளராக இருந்த கே வி ஆனந்த், தமிழ் சினிமாவில் முதன் முதலில் 2005ம் ஆண்டு கனா கண்டேன் என்னும் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பின்னர், அயன், கோ, மாற்றான், அனேகன், காப்பான் போன்ற பல்வேறு ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். இதனையடுத்து, அடுத்த படம் குறித்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த கே வி ஆனந்த், எதிர்பாராத விதமாக காலமானார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

இப்படி ஒரு நிலையில் இவருடைய மகளுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்று இருக்கிறது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜா அண்ணாமலை மண்டபத்தில் கே.வி.ஆனந்த் மகள் திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மேலும், இந்த திருமணத்தில் நடிகர் விஜய் சேதுபதி, ஜீவா உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஆனால், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஹிட் படங்களில் நடித்த நடிகர் சூர்யா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, சூர்யாவை வைத்து காப்பான், அயன் மாற்றான் போன்ற மூன்று படங்களை கே வி ஆனந்த் இயக்கியிருந்தார். ஆனால், சூர்யா திருமணத்திற்கு ஏன் வரவில்லை என்று ரசிகர்கள் கோபத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், சோசியல் மீடியாவில் வருத்தத்துடன் ரசிகர்கள் இது குறித்து பதிவிட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தமிழ் சினிமாவில் புகழ்மிக்கவர்கள் உயிரோடு இருக்கும் வரைதான் அவர்களுக்குன்டான மரியாதை நட்பு அன்பு எல்லாம் கிடைக்கும்.. அந்த புகழ்மிக்கவர்கள் இறந்தவுடன் ஒரு சில நன்றியுள்ளவர்களை தவிர அனைவரும் அவர்களை மறந்துவிடுவார்கள். இதுதான் சினிமா டிசைன்… அந்த வகையில் மறைந்த இயக்குநர் ஒளிப்பதிவாளர் திரு KV ஆனந்த் அவர்களின் மகள் திருமண வரவேற்பு விழா இன்று நடந்தது.

KV ஆனந்த் சார் இயக்கத்தில் நடித்த பல ஹிரோக்கள் வரவில்லை. ஆனால், விஜய்சேதுபதி தனது பிஸியான கால்ஷீட்களிலும் நேரத்தை ஓதுக்கி இந்த விழாவிற்கு வந்து மணமக்களை ஓதுக்கி இந்த நன்றி மறவாத குணம்தான் சேதுவின் தனித்துவம். நல்ல மனம் வாழ்க.” என ஜெயம் எஸ்.கே. கோபி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

40 minutes ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

49 minutes ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

2 hours ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

3 hours ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

3 hours ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

4 hours ago

This website uses cookies.