தமிழ்நாட்டை எதுக்கு பிரிச்சுக்கிட்டு – சர்ச்சை கேள்விக்கு வடிவேலு பதில் !

14 July 2021, 7:47 pm
Quick Share

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் மீம் உலகமே வடிவேலுவின் காமெடிகளை வைத்து தான் பெரும்பாலும் ஓடிக்கொண்டிருக்கிறது. மீம்ஸ் பக்கங்களை திறந்தாலே வடிவேலின் முகமும் வசனங்கள்தான் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட அரசியல் காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக 5 லட்சம் வழங்கியுள்ளார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வடிவேலு அவர்களது கேள்விக்கு பதிலளித்தார். அதில் முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் அப்போது ஐந்து லட்சம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியதாகவும் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் பதவியேற்ற ஒரு ஒரு மாதத்திலேயே உலகமே உற்றுப் பார்க்கும் அளவு சிறப்பாக செயல்படுகிறார்.

மேலும் இனிமேல் நிறைய படங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு இனிமே எல்லாம் நல்லதாக நடக்கும் என்று பதிலளித்த அவர் கொங்குநாடு பற்றிய கேள்விக்கு தமிழ் நாடாகவே இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் பதிலளித்தார் இறுதியாக நான் அரசியல் பேசவில்லை என கூறிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

Views: - 1814

100

27