வடிவேலு பாலாஜி மரணத்துக்கு வடிவேலு இரங்கல் !

10 September 2020, 9:56 pm
Quick Share

அது இது எது, கலக்கப்போவது யாரு என்னும் காமெடி ஷோக்களில், வரும் சிறப்பு விருந்தாளிகள் முதல் பார்வையாளர்கள் வரை தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேல் பாலாஜி.

நடிகர் வடிவேலுவை போல தோற்றம் கொண்டு காமெடியில் கலக்கிய இவர், பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்தநிலையில், மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்த அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் வடிவேலுக்கு இந்த செய்தி சொல்லப்பட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அவரது வயது மற்றும் இறந்ததற்கான காரணங்களை கேட்டறிந்த அவர் வேதனையுடன் “எனது குடும்பத்தில் 150 பேர் இருக்கிறார்கள் அவங்க எல்லார் சார்பாகவும் வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Views: - 0

0

0