அந்த படத்த மட்டும் வடிவேலு பண்ணிருந்தா பிளாக்பஸ்டரா இருந்திருக்கும்: பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்..!

Author: Rajesh
24 February 2023, 1:32 pm
Vadivelu-updatenews360-3
Quick Share

தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, சில காரணங்களுக்காக, சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.

பின்னர், தடையை நீக்கியதற்கு பின், 4 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது. சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரபல நடிகரும் இயக்குனருமான ஜி.மாரிமுத்து, வடிவேலுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்து குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “கத்தி முனையில் கறுப்பு சிங்காரம்” என்ற பெயரில் வடிவேலுக்காக ஒரு கதை எழுதியிருந்தாராம். அப்போது வடிவேலு நடித்த “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்” தோல்வியை தழுவியுள்ளது. அந்த சமயத்தில் இந்த கதையை வடிவேலுவிடம் கூறினாராம் மாரிமுத்து.

இந்த கதையில் ஒரு வயதான மூதாட்டியும், அவருக்கு பேரனும் இருப்பார்களாம். அந்த மூதாட்டி, பேரன் இருவருமே வடிவேலுதானாம். அதில் மிக சுவாரஸ்யமான காமெடி காட்சிகளை எழுதியிருந்ததாக மாரிமுத்து கூறினார். வடிவேலுவும் இந்த கதையில் நடிப்பதாக ஓகே சொன்னாராம். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்ததாம். ஆனால் வடிவேலு மிக அதிகமாக சம்பளம் கேட்டதால் இத்திரைப்படத்தை உருவாக்க முடியவில்லையாம்.

ஏற்கனவே வடிவேலு ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கியிருந்ததை, ஏஜிஎஸ் நிறுவனம் “தெனாலி ராமன்” திரைப்படத்திற்காக பயன்படுத்திக்கொண்டதாம். இத்திரைப்படத்தில் அவர் நடித்திருந்தால், “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி” படத்தின் வெற்றிக்குப் பிறகு வடிவேலுக்கு மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்திருக்கலாம் என கூறியுள்ளார்.

Views: - 387

0

0