தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில், மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக, போண்டாமணி, விஜயகாந்த் மறைவின்போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத வடிவேலு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும், நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏன் என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. வடிவேலுவுடன் பணியாற்றின் நடிகர்களின் இரங்கலுக்கு போகாததால் அவர் மீது பட விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாத வடிவோலு கலைஞர் 100 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல் ஆளாக வந்ததே பல விமர்சனங்களை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில், திரையில் நல்ல நடிகர் என வடிவேலு பெயர் எடுத்தாலும் தனக்குத்தானே இவர் ஏற்படுத்திக் கொண்ட பிரச்சினையில் இன்றுவரை பல சர்ச்சைகள் இவரை சுற்றி பேசப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில், நடிகர் வடிவேலு மகனின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மகனின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலானது. இதனை பார்த்த பலர் வடிவேலுவின் மகன் அவர மாதிரியே இருக்காரு என்று கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், ஒரு சிலர் வடிவேலு மகன் வடிவேலு மாதிரி இல்லாமல் வேற யாரும் மாதிரி இருப்பான் என்று கிண்டலாக கமெண்ட்களை செய்து வருகின்றனர்.
மேலும், சிலர் எந்த பந்தாவும் இல்லாமல் சாதாரண கிராமத்து இளைஞர் போல அடக்கமாக பேசும் விதம் மிக நன்று என தெரிவித்து, நீங்க நல்லா வருவீங்க தம்பி என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.