தளபதி 67ல் த்ரிஷா.. இப்படி நொறுக்கிட்டீங்களே: இணையத்தில் லீக்கான மொத்த லிஸ்ட்.. வேறலெவலில் பறக்கும் மீம்ஸ்..!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 4:10 pm
ActorVijayLokesh_Updatenews360
Quick Share

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்களின் மூலம் தென்னிந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் திரைப்படம் தளபதி67. இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

Thlapathy67actorsdetails_Updtenews360

தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதுதவிர ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தனர். அதோடு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர். நடன இயக்குனராக தினேஷ் இணைந்துள்ளார் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

TRishaUpdatenews360

ஆனால் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடாமல் சீக்ரெட் ஆக வைத்திருந்தனர். தளபதி67 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்திலேயே தொடங்கிவிட்டனர். ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் மூணாறில் நடத்தி முடித்தனர். இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது.

இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் படக்குழுவினர் 180 பேருடன் காஷ்மீர் பறந்துள்ளது தளபதி 67 படக்குழு. அதில் யார் யார் சென்றுள்ளார்கள் என்கிற விவரமும் வெளியாகி உள்ளது. அந்த லிஸ்ட்டில் நடிகைகள் திரிஷா மற்றும் பிரியா ஆனந்த், சத்யராஜ் என மொத்தமா அப்டேட்டும் லீக் ஆகி விட்டது. இதனால், இப்டி சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டா என தளபதி 67 டீம் இப்போ புலம்பித் தவிக்கும் என மீம் போட்டு நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

Views: - 256

8

1