எங்கயா இருந்த இத்தனை நாளா? மாஸ்டர் படத்தைப் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை பாராட்டிய விஜய் !

28 August 2020, 8:14 pm
Quick Share

கைதி படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் படத்தில் நடித்துள்ளார் விஜய். இந்த மாஸான படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இப்போதைக்கு, Corona வால் பொங்கல் அன்று மாஸ்டர் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது என தகவல்கள் வந்திருக்கிறது.

இந்த முழு படத்தையும் தளபதி விஜய் மற்றும் படக்குழுவினர் சமீபத்தில் பார்த்துள்ளனர். படத்தைப் பார்த்து மிரண்டுபோன தளபதி விஜய் உடனடியாக லோகேஷ் கனகராஜை கட்டித் தழுவி மிகவும் பாராட்டியுள்ளார்.

Views: - 28

0

0