சண்டையில் அடி வாங்கி விழுந்த விஜய் சேதுபதி மகன் சூர்யா.! வைரலாகும் வீடியோ..!

Author: Udayaraman
4 August 2021, 5:57 pm
Quick Share

பிரபல நடிகர் விஜய் சேதுபதி தனதுb வித்தியாசமான உடல் மொழி கொண்ட நடிப்பாலும், தனது யதார்த்தமான குரல் வளத்தாலும், நல்ல குணத்தாலும் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரம் ஆகி விட்டார். மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி, எல்லா வித மக்களுக்கும் உதவும் மனம் கொண்டவர். விஜய் சேதுபதி தற்போது அரைடஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.

துக்ளக் தர்பார், லாபம் ஆகிய படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நவரசா, கமலுடன் விக்ரம் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருக்கிறார். நானும் ரவுடிதான் படத்தில் சின்ன பிள்ளையாக நடித்த அவர் அதன்பின் சிந்துபாத் படத்தில் நடித்தார். தற்போது இவரது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் மானாட மயிலாட நிகழ்ச்சி புகழ் கோகுடன் இணைந்து ஸ்டண்ட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சூர்யா கோகுலுடன் இணைந்து சண்டையிடுவது போல ஒரு ஸ்டண்ட் காட்சியில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க செல்போனிலேயே படம்பிடிக்கப்பட்டு எடிட் செய்யப்பட்ட அந்த வீடியோவை கோகுல் தனது சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார். இது ஏதும் படத்திற்கான பயிற்சியா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ரசிகர்களிடையே அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Views: - 1542

105

24