இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் விஜய் மகன் சஞ்சய்: வைரலாகும் ஷூட்டிங் போட்டோஸ் இதோ..!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2023, 4:00 pm
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள் தெறி படத்தில் ஒரு சீனில் நடித்திருப்பார். மேலும், மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இவர் கடந்த ஆண்டு சினிமாதுறை சார்ந்த படிப்பை முடித்தார்.

ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூட சஞ்சய்காக கதை எழுதி படம் இயக்கவிருந்தார். ஆனால், சஞ்சய் தற்போது தனக்கு இன்டர்ஸ்ட் இல்லை என்று கூறியதாக விஜய் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இந்நிலையில், சஞ்சய் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். ஏற்கனவே சில குறும்படங்களை இயக்கியிருந்தார் சஞ்சய், அதனைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் புதிய குறும்படத்தை இயக்கி வருகிறார். அந்த குறும்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதனால், விரைவில் ஒரு இயக்குனராக சஞ்சய் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.

Views: - 560

1

0