தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா ஆகியோரது நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம், கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக வெளியானாலும் அதிக வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது. 5 நாட்களில் தமிழகத்தில் ரூ.63 கோடி வரையிலும், உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்துள்ளது.
முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்தி இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பூ, யோகி பாபு, சதிஷ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் ரசிக்கும் படி அமைந்திருந்தது. இந்நிலையில், வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தளபதி67.
இப்படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன. ஆனால், இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், இதில் விஜயின் கதாபாத்திரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய் 46 வயது நிரம்பிய டீக்கடைக்காரராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னரே, பகவதி படத்தில் விஜய் டீக்கடை நடத்தி வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு தனது தம்பியை கொலை செய்ய, ஒரு ரவுடியாக மாறுவது போன்ற கதை அமைக்கப்பட்டிருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்னும் 10 நாட்களுக்குள் தளபதி67 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, மன்சூர் அலிகான், கௌதம் மேனன் ஆகியோர் பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், தளபதி67 படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.