மனைவியை களமிறக்கிய விமல்: மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல்!

2 March 2021, 10:07 pm
Quick Share

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மணப்பாறை தொகுதியில் போட்டியிடுவதற்கு நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வருபவர் நடிகர் விமல். களவாணி, வாகை சூட வா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு, களவாணி 2, கன்னி ராசி, காவல், அஞ்சல, மஞ்சப்பை, நினைத்தது யாரோ, ஜன்னல் ஓரம் என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லை. கடந்த 2010 ஆம் ஆண்டு அக்‌ஷயா என்பவரை காதலித்து நடிகர் விமல் திருமணம் செய்து கொண்டார். அக்‌ஷயா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

கொரோனா லாக்டவுனில் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் நடிகர் விமல் கிருமிநாசினி தெளித்துள்ளார். அதனால், தனது சொந்த ஊரான மணப்பாறை பகுதியில் விமலுக்கு கொஞ்சம் செல்வாக்கு இருக்கும் நிலையில், அவரது மனைவி அக்‌ஷயாவை அந்த தொகுதியில் போட்டியிட களமிறக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதில், மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட அக்‌ஷயா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விமலும் அவரது மனைவி அக்‌ஷயாவும் நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். மணப்பாறை விமலின் ஊர் என்பதால், அந்தப் பகுதியில் போட்டியிடுவதற்கு அக்‌ஷயாவிற்கு சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 1868

1

0