மீண்டும் லுங்கியை தூக்கி கட்ட தயாராகும் விஷால்.?

Author: Rajesh
1 February 2022, 4:42 pm

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரமே வாகை சூடும்’ பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதனைத்தொடர்ந்து ‘லத்தி’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடரந்து விஷால் முத்தையாவின் படத்தில் இணைகிறார் என்று சொல்லப்படுகிறது.

இயக்குனர் முத்தையா கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘விருமன்’ படத்தினை எடுத்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் விஷாலுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களது கூட்டணி கடந்த 2016 ஆம் ஆண்டு ‘மருது’ படத்தில் இணைந்திருந்தனர். இந்த படத்தில் விஷால், லுங்கியை தொடை தெரிய கட்டிக்கொண்டு, தில்லாக இருப்பது போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Amala Paul viral video 2024 நடுக்கடலில் அமலாபால்..சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்…வைரலாகும் வீடியோ..!
  • Views: - 2385

    1

    0