தமிழ் திரைப்படத்தில் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் பாடகராகவும் கலக்கி வரும் நடிகர் தான் விஷால்.
விஷால் கிருஷ்ணா ரெட்டி 29 ஆகஸ்ட் 1977 அன்று தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் பிறந்தார்.அவரது தந்தை ஜி.கே. ரெட்டி ஒரு தொழிலதிபர் மற்றும் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கான திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார்.
அவரது மூத்த சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார், இவர் விஷாலின் பல படங்களை தயாரித்துள்ளார். விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறையில் பட்டம் பெற்றார்.
இப்போது உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமான நடிகர்களில் விஷாலும் ஒருவர். சமீபத்தில் தான் நடிகர் விஷால் அனிஷா என்ற ஒரு பெண்ணை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து இருந்தார்.
இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் கூட நடைபெற்றது. ஆனால், தீடீரென இந்த திருமணம் நின்றுபோனது. இதன்பின் விஷால் திருமணம் குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இப்படி பட்ட ஒரு நிலைமையில் விஷால் பிரபல நடிகை ஒருவரின் மகனுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்று சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது வரை பல நடிகர்கள் பல ஏழை மக்களுக்கு உதவி செய்து வந்ததை பார்த்திருப்போம் ஆனால் நடிகர் விஷால் இப்போது மட்டும் இல்லை சுமார் 6 வருடமாகவே நடிகை ஷர்மிளாவின் மகனுக்கு கல்வி கட்டணம் கட்டி வருவதாக கூறியுள்ளார் நடிகை ஷர்மிளா.
தற்போது திரையுலகில் ஆரம்ப காலத்தில் இருந்து தனது முதல் நடிப்பை குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி தமிழ் சினிமாவில் இல்லாமல் மலையாள சினிமாவிலும் கன்னட சினிமாவில் பிரபலாக இருக்கும் நடிகை தான் ஷர்மிளா.
சமீப காலமாகவே நடிகை ஷர்மிளா தனது சினிமா வாழ்க்கையை மலையாள படத்தில் தான் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். முக்கியமாக பல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் நடிகை ஷர்மிளா.
நடிகை ஷர்மிளா தந்து வாழ்க்கையில் கிஷோர் சத்யா என்ற நபரை திருமணம் செய்து பின்னர் சில வருடத்திற்கு பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தார்.
பின்னர் 2வதாக ராஜேஷ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ஷர்மிளா. கல்யாணம் நடந்து ஒரு வருடத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் தன் இரண்டாவது கணவருடனும் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் நடிகை ஷர்மிளா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தந்து மகனுக்கு கடந்த 6 ஆண்டுகளாக நடிகர் விஷால் தான் கல்வி கட்டணம் கட்டி வருகிறார் என்று கூறியுள்ளார் நடிகை ஷர்மிளா.
இப்போது உள்ள காலத்தில் ஒரு 2000 ரூபாய் ஒரு ஆணிடம் கடன் வாங்கினால் மாலை நேரம் போன் செய்து வெளிய போலாமா என்று கேட்க்கும் நபர்கள் மத்தியில் நடிகர் விஷால் எனக்கு ஒரு கால் கூட செய்தது இல்லை, மெசேஜ் மட்டும்தான் அனுப்புவார், அதிலும் தன்னையும் தன் மகனையும் கடவுள் ஆசிர்வதிப்பார் என்று கூறுவாராம்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.