அடுத்தடுத்து அதிர்ச்சி..! மீண்டும் ஒரு நடிகை தூக்கிட்டு தற்கொலை: மனதை உருக்கும் கடிதம்.. என்ன இருந்தது தெரியுமா?

Author: Vignesh
1 October 2022, 7:45 pm
Quick Share

நாட்களாக நடிகைகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் வாய்தா பட நடிகை தீபிகா தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு தமிழ் பட நடிகை தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் மிக பிரபலமான மாடலாக இருந்தவர் அகான்ஷா மோகன். இவர் மும்பையில் லோகண்ட்வாலா பகுதியில் உள்ள யமுனா நகர் சொசைட்டியில் வசித்து வந்தார். இவர் எம்பிஏ படித்திருக்கிறார்.

இவர் எப்போதுமே instagram-ல் ஆக்டிவாக இருந்திருக்கிறார். இவர் உடற்பயிற்சியில் தனி கவனம் செலுத்தி வந்தவர். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவிலும் தன்னுடைய உடற்பயிற்சி மற்றும் டயட் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து இருக்கிறார். இவருக்கு நடனத்தின் மீதும் அதிக ஆர்வம் உள்ளவர். மேடை நாடகங்களில் நடித்தும் இருக்கிறார். அதன் பின் இவர் திரைப்படங்களில் நடித்தார்.

அது மட்டும் இல்லாமல் இவர் மாடலிங் செய்வது மட்டும் இல்லாமல் சில விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் இவர் நடிப்பில் சியா என்ற படம் வெளியாகி இருந்தது.

அகான்ஷா மோகன் தங்கிய ஹோட்டல்:

இந்நிலையில் நடிகை அகான்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கும் சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த புதன்கிழமை அன்று மும்பை அந்தேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடிகை அகான்ஷா மோகன் தங்கி இருக்கிறார். அந்த ஹோட்டலில் இரவு எட்டு மணி அளவில் அகான்ஷா மோகன் உணவை ஆர்டர் செய்திருக்கிறார். பின் மறுநாள் ஹோட்டல் பணியாளர் அகான்ஷா மோகன் அறையின் கதவை தட்டி இருக்கிறார்கள்.

அகான்ஷா மோகன் தற்கொலை:

ஆனால், நடிகை கதவு திறக்கப்படவில்லை. பல மணி நேரம் கதவை தட்டியும் நடிகை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் பணியாளர்கள் இந்த தகவலை ஹோட்டல் மேலாளிடம் தெரிவித்து இருந்தார்கள். உடனடியாக இந்த தகவலை வெர்சோவா போலீசாருக்கு ஹோட்டல் மேலாளர் தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று இருக்கிறார்கள்.

போலீஸ் விசாரணை:

அப்போது நடிகை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. பின் அவருடைய உடலை போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் நடிகை இருந்த அறையை போலீசார் சோதனை இட்டு இருக்கிறது. அப்போது அந்த அறையில் கடிதம் ஒன்றை போலீசார் கண்டெடுத்திருக்கின்றனர்.

அந்த கடிதத்தில் நடிகை கூறி இருந்தது, மன்னிக்கவும், நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு அமைதி மட்டுமே தேவை.

நடிகை எழுதிய கடிதம்:

எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. யாரையும் தொல்லை செய்ய வேண்டாம் என்று எழுதி இருந்தார். இதனை எடுத்து போலீசார் நடிகையின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. மேலும், நடிகை அகான்ஷா மோகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மும்பை திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகையின் இறப்பிற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 181

0

0