மதுரையில் கச்சேரி நடத்திய ஆண்ட்ரியா… இந்த உடையிலா..? மெய்மறந்து போன ரசிகர்கள்!!

Author: Babu Lakshmanan
6 February 2023, 2:26 pm
Quick Share

மதுரையில் ஜெய பாரத் ஹோம்ஸ் டைட்டன் சிட்டி வீடுகள் துவக்க விழாவில் நடிகை ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை அடுத்துள்ள சூர்யா நகரில் ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் 300 புதிய வீடுகள் கட்டும் டைட்டன் சிட்டி திட்டத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில், நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியா பங்கேற்று இசை நிகழ்ச்சி நடத்தினார்.

இந்நிகழ்வில் நடிகையும், பாடகியுமான நடிகை ஆண்ட்ரியா பங்கேற்றார். ஜெயபாரத் ஹோம்ஸ் இயக்குனர் நிர்மலா தேவி ஜெயக்குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என் ஜெகதீசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஜெயபாரத் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார் பேசும் போது, மதுரை சூர்யா நகர் பகுதியில் 11.5 ஏக்கரில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை மிகுந்த தரத்துடன் கட்ட உள்ளோம் என்றும், இதற்கு பொதுமக்கள் வழக்கம்போல ஆதரவு தந்திட வேண்டுகிறேன், என்றார். அதோடு, டைட்டன் சிட்டி வீடு கட்டும் திட்டத்தில் ரூபாய் 59 லட்சம் முதல் பல்வேறு தரமான வசதிகளுடன் வீடுகள் கட்ட உள்ளதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா இசை நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரிய திரைப்படங்களில் பாடிய பாடல்கள் ஆடல் பாடலுடன் பாடினர். ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

Views: - 504

29

7