கோடி ரூபாய் தந்தாலும் இந்த முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கமாட்டேன் என்று சொன்ன நடிகை அனுஷ்கா..!

14 August 2020, 11:54 am
Quick Share

பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் கடந்த 1983-ம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு. ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த இந்த படத்தை பாக்யராஜே இயக்கி இருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது 37 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் செய்யப்பட உள்ளது.
இதில் நடிகரும், இயக்குனருமான சசிகுமார் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் பாக்யராஜ் தான் இயக்க உள்ளார். சசிகுமாருக்கு ஜோடியாக அதாவது ஊர்வசி கதாபாத்திரத்தில், நடிக்க நடிகை அனுஷ்காவை அணுகியுள்ளார் பாக்யராஜ்.

என்ன காரணமோ, யார் மேல் உள்ள கோபம் என்று தெரியவில்லை, கோடி ரூபாய் கொடுத்தாலும் முடியாது என மறுத்துவிட்டாராம். இனி நயன்தாராவை போல் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களுக்கு மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளதால் தான் மறுத்துவிட்டார் என்று கூறுகிறார்கள்.

தற்போது இவர் பதில் மேகா ஆகாஷை நடிக்க ஒப்பந்தம் செய்யலாம் என படக்குழு யோசித்து வருகிறார்களாம்.

Views: - 10

0

0