நல்ல அழகு, திறமையான நடிப்பு என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் வசீயம் செய்து வைத்திருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. கர்நாடகாவை சேர்ந்தவரான இவர் யோகா டீச்சராக தனது கெரியரை துவங்கினார். அதன் பின்னர் பின்னணி பாடகியாக சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடித்து வருகிறார்.
2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் -நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படம் தான். அதன் பின்னர் 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் கவர்ச்சி தாராளமாக காட்டி நடித்த அனுஷ்கா அருந்ததி திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு கவர்ச்சியை ஏறகட்டிவிட்டு அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அருந்ததி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.
தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர் வரலாற்று வெற்றி திரைப்படமான பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலம் ஆனார். அந்த படத்தில் நடித்தபோது பிரபாஸ் உடன் காதல் வயப்பட்டு சில வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்துவிட்டார். இதனிடையே பிரபாஸ் இந்தி பட நடிகை கிருத்தி சோனோனை காதலித்து வருகிறார். விரைவில் அவரை திருமணம் செய்யவுள்ளார்.
ஆனால், அனுஷ்கா ஷெட்டி 42 வயது ஆகியும் காதலனும் இல்லாமல் கல்யாணமும் ஆகாமல் இருந்து வருகிறார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், அனுஷ்கா பிரபாஸை பிரிந்ததற்கு காரணம் வேறு தொழிலதிபருடன் அனுஷ்கா தொடர்பில் இருந்தது தான் என்றும் திருமணம் வரை சென்று பின் பாதியிலேயே தடையானதால் சோகத்தில் அனுஷ்கா இருந்தார். மேலும் உடல் எடையை ஏற்றியதாலும் உயரம் 6 அடிக்கும் மேல் இருப்பதாலும் மாப்பிள்ளை அவருக்கு கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அரியனையில் ஏறிய தேவசேனாவுக்கு திருமண மேடை இனிமேல் ஏறுவதற்கு வாய்ப்பில்லை என்று பயில்வான் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.