விஜய் பட நடிகைக்கு விரைவில் டும் டும் டும்… மாப்பிள்ளை யார் தெரியுமா..? வைரலாகும் நிச்சயதார்த்த போட்டோஸ்!!

பைரவாவிற்கு பிறகு நடுவன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அபர்ணா வினோத். கடந்த 2017 ஆம் ஆண்டு பரதன் என்பவரின் இயக்கத்தில் வெளியாக இருந்தது விஜயின் பைரவா. இந்த படத்தை வெங்கட்ராம ரெட்டி என்பவர் தயாரித்திருந்தார்.

இதில் கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க, பிரவீன் படத்தொகுப்பு செய்திருந்தார். விஜயின் அறுபதாவது படமான பைரவா படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

வங்கியில் கடன் பெற்றவர்களிடமிருந்து திருப்பி வாங்கும் முகவர்கள் சம்பந்தப்பட்ட கதைக்களத்தை இந்த படம் கொண்டிருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் 50 நாட்கள் திரையரங்குகளில் ஓடி வசூல் ரீதியில் சிறப்பாக சாதனை படைத்திருந்தது பைரவா. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக நடித்திருந்தார் அபர்ணா வினோத். இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

கோழிக்கோட்டை சேர்ந்த ரினில் ராஜ் என்பவர் உடன் இவரது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது குறித்தான புகைப்படங்களை பதிவிட்டுள்ள அபர்ணா “உன்னை என்று முதன்முதலாக சந்தித்தேனோ அன்று முதல் எல்லாமே மாறத் துவங்கியது என எழுதியுள்ளார்.

நீண்ட நாட்களாக காதலித்து வந்த இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்பந்தத்துடன் நடைபெறுவதாக தெரிகிறது. இதன் முதல் கட்டமாக நடைபெற்ற பிரம்மாண்ட நிச்சயதார்த்தம் குறித்தான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.

இவர் மலையாளத்தில் ‘நான் நின்னோடு கூடேயுண்டு’ என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அதை தொடர்ந்து கோகினூர் என்ற படத்திலும் நடித்துள்ளார். இதன் பிறகு தமிழில் பைரவா படத்தில் துணை நடிகையாக தோன்றி இங்கு அறிமுகமானார். பைரவாவிற்கு பிறகு நடுவன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அபர்ணா வினோத்.

Poorni

Recent Posts

விரும்புகிற தெய்வங்களை அவரவர் வணங்குவது ஜனநாயக உரிமை.. முருகர் மாநாட்டுக்கு வாழ்த்துகள் : இபிஎஸ் அதிரடி!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கீழடி ஆய்வுகள் குறித்து சம்பந்தமாக நேற்றைய தினமே முன்னால் அமைச்சர்…

33 minutes ago

தலைவர் மாதிரி பேசுறதுக்கு இன்னும் பயிற்சி வேணும்? தனுஷை கண்டபடி கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…

கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான…

52 minutes ago

என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன் தெரியாது, ஜெய் ஹனுமான் தெரியும் : நடிகை நமீதா பெருமிதம்!

11 வது சர்வதேச யோகா தினத்தையொட்டி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முன்னாள்…

54 minutes ago

பார்ட்டி வைத்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட ரவி மோகன் – கெனிஷா… திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன்…

2 hours ago

என் கதையில இருந்து உருவிட்டாங்க? காப்பிரைட் வழக்கில் சிக்கிய நானியின் ஹிட் 3!

ஹிட் அடித்த ஹிட் 3 தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் நானியின் நடிப்பில் கடந்த மே 1 ஆம்…

2 hours ago

விஜய் சின்ன பச்சா… சுறாவா இல்ல சின்ன இறாவானு 2026 தேர்தலில் தெரியும் : பிரபல நடிகர் கிண்டல்!!

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை சந்தைமேடு பகுதியில் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நகரச்…

2 hours ago

This website uses cookies.