சித்திரம் பேசுதடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பாவனா. அறிமுக படத்திலேயே தனது நடிப்பால் பேசப்பட்ட அவருக்கு தொடர்ந்து ஜெயம் ரவியுடன் நடித்த `தீபாவளி’ திரைப்படம் புகழை தேடி தந்தது. மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இதனிடையே கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி ஷூட்டிங் முடித்துவிட்டு திரும்பும் போது திடீரென காரில் கடத்தப்பட்டு முகம் தெரியாத நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்.
பின்னர் இதன் பின்னணியில் இருப்பவர் நடிகர் திலீப் தான் என்று பாவனா கூறியதன் அடிப்படையில் போலீசார் நடிகர் திலீப்பை தீவிரமாக விசாரித்தார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேரோடும், புகழோடும் திகழும் பிரபல நடிகைக்கே இந்த நிலையா? சினிமா துறையில் என்னதான் நடக்கிறது? என்றே எல்லோரும் பேசினர். அதன் பின்னர் பல வருட இடைவெளிவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில் பாவனாவுக்கு நடந்த பாலியல் தோலை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய செய்யாறு பாலு, நடிகர் திலீப் மனைவி மஞ்சுவாரியர் கூட இருக்கும்போதே வேறு ஒரு நடிகையுடன் ரகசிய உறவில் இருந்துள்ளார். இதனை பாவனா தெரிந்துக்கொண்டு மஞ்சுவாரியரிடம் சொல்லிவிட்டாராம். பின்னர் மஞ்சு வாரியர் நடிகர் திலீப்பை விவாகரத்து செய்துவிட்டார்.
அந்த சம்பவம் நடிகர் தீலிப் மோசமானவர் என மலையாள சினிமா துறையில் பேசிக்கொண்டார்கள். அதனால் அவருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டதோடு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.இதனால் பவானா மீது கண்டுங்கோபத்தில் இருந்த திலீப் அவரை காரில் கட்டத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக செய்திகள் வெளியானது.
இந்த சம்பவத்தை குறித்து பாவனா சொன்னது என்னவென்றால், “நான் எத்தனையோ இரவுகளில் படப்பிடிப்பிற்கு சென்றிருக்கிறேன். ஆனால் அந்தக்காருக்குள் எனக்கு நடந்த சம்பவம் என்னை மிகவும் உலுக்கிவிட்டது”. “அதிலிருந்து நான் வெளியே வருவதற்கு பல நாட்கள் ஆயிற்று. எனக்கு நேர்ந்த இந்த கொடுமை வேறொரு எந்த பெண்ணுக்கு நடந்திருந்தால் அந்த பெண் நிச்சயம் தற்கொலை செய்துக்கொண்டிருப்பாள். இந்த பிரச்சனையால் பாவனா பலவிதமான மன வலியை அனுபவித்தேன். அதன் பின் எனக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த போது பிரபல கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் தன்னுடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். என பாவனா பேட்டி ஒன்றில் கூறியதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
This website uses cookies.