தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் நடிக்க அட்லீ அழைத்திருந்தார். ஆனால் அவர் லியோ படத்தில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக நடிகர் அல்லு அர்ஜுன் அந்த ரோலில் நடிக்கிறார்.
இப்படத்தின் கடைசிகட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜவான் திரைப்படத்தின் முதல் பாடலான “வந்த இடம்” என்கிற பாடல் அண்மையில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக இப்படத்தில் நயன்தாரா மாசான ஹீரோயினாக நடித்திருக்கிறார். அவரது கேரக்டர் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்தது.
நயன்தாராவுக்காக ஜவான் படத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம் உள்ளனர். இப்படியான நேரத்தில் ஹீரோயின் நயன்தாராவை விட படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அதிக சம்பளம் வாங்கியுள்ளாராம்.
அதன்படி நயன்தாரா ரூ.11 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நிலையில், தீபிகா படுகோன் ரூ.17 முதல் ரூ.20 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் கசிந்து அதிர்ச்சியளித்துள்ளது. என்னதான் நயன்தாரா நமக்கு லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அக்கட தேசத்திற்கு சென்று ஹீரோயினாக நடித்தாலும் வடக்கீஸ் நடிகைகளை மிஞ்ச முடியாது போலயே என நெட்டிசன்ஸ் வருத்தமடைந்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.