எனது முகம் மற்றும் பல இடங்களில் காயப்படுத்தி சித்ரவதை செய்தார்: கதறிய விஜயகாந்த் பட நடிகை..!

Author: Rajesh
2 February 2023, 3:00 pm
VijayakanthUpdatenews360
Quick Share

1999ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான “பிரேமா கோசம்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை புளோரா சைனி(Flora Saini). இவருக்கு ஆஷா சைனி என்ற பெயரும் உள்ளது. தமிழில் 2004ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான “கஜேந்திரா” படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழ் மொழியில், குஸ்தி, குசேலன், திண்டுக்கல் சாரதி, கனகவேல் காக்க, நானே என்னுள் இல்லை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி உள்ளிட்ட மொழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மாடல் அழகியான இவர், விளம்பரங்களிலும், ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில், நடிகை புளோரா சைனி தன்னுடைய வாழ்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளை பற்றி பகிர்ந்துள்ளார்.

இந்திய சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் வெளியிட்டிருந்த இன்ஸ்டா பதிவில் “எனது 20 வயதில் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த சமயம், ஹிந்தியில் 10திற்க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தேன். இப்படி படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஒரு தயாரிப்பாளரின் மீது காதல் கொண்டேன். அதற்கு பிறகு தான் என்னுடைய வாழ்கை மாறியது.

அந்த தயாரிப்பாளர் என்னை தவறாக பயன்படுத்திக்கொண்டார். என்னுடைய முகங்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் என்னை காயப்படுத்தி என்னுடைய போனையும் பிடிங்கி வைத்துக் கொண்டார். மேலும் என்னை நடிக்கவிடாமலும், யாரிடமும் பேசவிடாமலும் சித்ரவதை செய்தார். கடைசியில் எப்படியோ அங்கிருந்து தப்பித்து என்னுடைய பெற்றோர்களிடம் திரும்பி வந்துவிட்டேன். அந்த நரகத்தில் இருந்து மீள எனக்கு சில காலங்கள் ஆனது. இப்போது என்னுடைய பெற்றோருடன் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்று தெரிவித்திருந்தார் நடிகை புளோரா சைனி.

இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் இந்த வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு முன்னர், 2007ம் ஆண்டு காதலர் தினத்தன்று நான் காதலித்த பிரபல தயரிப்பாளர் கவுரங் தோஷியுடன் டேட்டிங் சென்ற போது என்னை கடுமையாக தாக்கி தாடை எலும்பை உடைத்ததாக இவர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 939

13

8