மெழுகு டாலு, அழகு ஸ்கூலு – குட்டி ஜானுவை கொஞ்சி தீர்க்கும் நெட்டிசன்கள்

19 January 2021, 10:58 pm
Quick Share

தான் நடித்த முதல் படத்திலேயே தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர் கௌரி கிஷான். விஜய் சேதுபதி, திரிஷா இணைந்து நடித்த 96 படத்தில் திரிஷாவின் பள்ளிப்பருவ மாணவி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கௌரி கிஷான்.

ஜானு என்ற கதாபாத்திர பெயரை மக்கள் மனதில் பசை வைத்து ஒட்டி கொண்டது போல் அவ்வளவு அழகாக நடித்திருப்பார். இந்த படத்தின் வெற்றியால் தெலுங்கிலும் கன்னடத்திலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்தில் பாவனாவும் தெலுங்கில் சமந்தாவும் நடித்திருந்தார்கள்.

இதன் பிறகு மலையாளத்தில் சன்னி வெயினோடு ஒரு படத்தில் நடித்தார். தற்போது பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் கௌரி தனது சமூக வலைத்தளத்தில் எப்போதும் பிசியாக இருக்கிறார்.

அவ்வபோது தளத்துக்கு புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டால் பதிவிட்டு வரும் கௌரி கிஷன் தற்போது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வாரி சீவி அழகு பொம்மையாக மின்னுவதை பார்த்த ரசிகர்கள் மெழுகு டாலு, அழகு ஸ்கூலு என கொஞ்சம் வருகின்றனர்.

Views: - 0

0

0