தமிழில் ‘எங்கேயும் காதல்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. அதன் பிறகு பிரியாணி, மான் கராத்தே, சிங்கம் 2 போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையே, நடிகை ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளாக சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு ஹன்சிகா நடிக்க மாட்டார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், தற்போது 6 படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை ஹன்சிகா தனது திருமண வீடியோவை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் திருமண வீடியோ பிப்ரவரி 10ம் தேதி வெளியாக இருப்பதாக டீசர் ஒன்று வெளியாகி உள்ளது.
லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் ஹன்சிகா – சோஹேல் கத்தூரியா ஜோடியின் திருமண வீடியோ வெளியாக உள்ளது. அந்த வீடியோவில் எந்த மனிதரின் Past நடந்த விஷயங்கள் பற்றி பேசவும் கூடாது, கேட்கவும் கூடாது என்று அழுகும் காட்சிகள் சிலது டீசரில் இடம்பெற்றுள்ளது. ஹன்சிகாவின் கணவர் சோஹேல் கத்தூரியாவின் முன்னாள் மனைவியை குறித்து பல ட்ரோல்கள் கிளம்பிய நிலையில், அதற்கு மறைமுகமாக ஹன்சிகா பேசியுள்ளார் என சொல்லப்படுகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.