தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா டிகுரூஸ். தமிழில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் அவருக்கு நல்லாவே கைகொடுத்தது. குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாட்டுக்கு அவர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக தமிழில் ‘கேடி’ படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ என்பவரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருந்த நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள். இதையடுத்து, உடல் எடை கூடிய அவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், அடிக்கடி பிகினி ஆடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.
இலியானா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எப்போதும் வாய் திறக்காமல் இருந்து வருகிறார். இதனிடையே செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேல் என்பவருடன் ரகசியமாக டேட்டிங் செய்துவந்தார். அவ்வப்போது இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் கசிந்து காதல் கிசுகிசுக்கப்பட்டது. அந்த நபர் பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃபின் சகோதரர்.
காதலை வெளிப்படுத்துவதற்கு முன்னரே இலியானா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார். இதனால் இலியானாவின் கர்ப்பத்திற்கு காரணம் யார்? என்ற கேள்வி எழுந்து பரபரப்பாக பேசப்பட்டது. அவ்வப்போது தனது கர்ப்பமான போட்டோக்களை வெளியிட்டு வந்த இலியானாவுக்கு கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் என் கணவர் எனக்கு கிடைத்த வரம் என்றும், என்னை நன்றாக புரிந்து கொள்ளுவர். கஷ்டத்தில் இருக்கும் போது, உதவும் மனிதர் என்றும் தெரிவித்துள்ளார். நான் கர்ப்பமாக, இருக்கும் போது என்னுடன் துணையாக இருந்தார். அப்போது, எனக்கு மிகவும் மன அழுத்தம் ஏற்பட்டது. டெலிவரி சமயத்தில், என்னை கண்ணின் இமைப்போல் பார்த்துக் கொண்டார்.
அந்த நாளை என் வாழ்க்கையில் மறக்க முடியாது. இப்படி இருக்கும்போது சமூக வலைதளங்களில் எங்களைப் பற்றி மோசமாக பேசுவது வேதனை அளித்தாலும், நான் கண்டுகொள்ள மாட்டேன். ஆனால், என் கணவர் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர் அன்பானவர் நான் நடித்த படங்களின் பாடல்களை அவர் பாடுவார் என்று உருக்கமாக நடிகை இலியானா பேசியிருக்கிறார்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.