என்னை Arrest பண்ணுங்க Madam – காக்கி சட்டையில் கிறங்கடித்த இனியா !
26 January 2021, 10:31 pmசற்குணம் இயக்கிய வாகை சூடவா படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இனியா. இவரது நடிப்பும், கதாபாத்திரமும் பல பாராட்டுகளைப் பெற்றது. இனியா முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு வெளியான பாடசாலை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மௌனகுரு, அம்மாவின் கைபேசி, யுத்தம் செய், வைகை எக்ஸ்பிரஸ் உட்பட பல படங்களில் நடித்தார்.
ஒரு கட்டத்திற்கு மேல் இவர் நடித்த படங்கள் எதுவும் அவ்வளவாக ஓடாத காரணத்தினால் இயக்குனர்கள் இவரை புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். தற்போது பட வாய்ப்பை தேடி வரும் இவர் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வாய்ப்புகள் தேடி வருகிறார்.
சமீபகாலமாக தனது புகைப்படங்களில் கவர்ச்சி காட்டி வரும் இவர் தற்போது போலீஸ் வேடம் அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் என்னை அரெஸ்ட் பண்ணுங்க என அன்புக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
0
0