எனிமில ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் மம்தா மோகன் தாஸ்?

4 February 2021, 10:40 pm
Quick Share

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன் தாஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் எனிமி. இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்ணாளினி ரவி நடிக்கிறார். மேலும், பிரகாஷ் ராஜ் உள்பட முக்கிய பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்த நிலையில், இந்தப் படத்தின் முக்கிய ரோலில் மம்தா மோகன் தாஸ் நடிக்கிறார். அதுவும், ஆர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக சிவப்பதிகாரம், தடையறத் தாக்க, குரு என் ஆளு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஊமை விழிகள் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், தான் எனிமி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று ஆர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் ஆர்யா ஒரு கையில் கைவிலங்கு இருப்பது போன்றும் ஈரான் நாட்டு சிறைக் கையின் சீருடையை அணிந்திருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

ஆம், ஈரானிலுள்ள கோராமாபாத் நாட்டின் ஷாங்காய் சிறை சீருடையை ஆர்யா அணிருந்திப்பது போன்று, அவரது உடலில் ரத்தக் கறை இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள சக்ரா படம் வரும் 19 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்திலும் விஷால் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0