கடந்த சில நாட்களாகவே ஹேமா கமிட்டி பாலியல் புகார்கள் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை குறித்து வெளிப்படையாக கூற இதில் பல பெரிய தலைகள் சிக்கி வருகிறார்கள். இந்த விஷயம் பெரும் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்திருக்கிறது.
காஜல் பசுபதி:
இந்த நிலையில் தற்போது இது குறித்து சமீபத்திய பேட்டிகளில் பேசி இருக்கும் நடிகை காஜல் பசுபதி ஹேமா கமிட்டி கேரளாவில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க இருந்தால் நன்றாக இருந்திருக்கும். பெண்கள் துணிந்து புகார்கள் கொடுத்திருப்பார்கள் என கூறினார்.
இந்த விவகாரம் நடிகர்களின் வயிற்றில் புலியை கரைத்திருக்கிறது. உண்மையில் இது பாராட்டக்கூடிய விஷயம் தான். இந்த பிரச்சனையில் கேரளாவில் மட்டுமல்ல பெண்கள் எங்கெங்கு வேலை செய்கிறார்களோ அங்கெங்கெல்லாம் இது போன்ற பிரச்சனை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
வெள்ளையா இருந்தால் வாய்ப்பு:
பக்கத்து ஸ்டேட்டுக்கு வந்துவிட்டது விரைவில் தமிழ்நாட்டுக்கும் வரும் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சினிமா கனவோடு வரும் பெண்கள் வேறு வழி இல்லாமல் அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு ஒத்துக்கொள்கிறார்கள். சிலர் என்னிடம் திறமை இருக்கு நான் ஏன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என மறுப்பு தெரிவிப்பவர்கள் அடையாளமே இல்லாமல் போய்விடுகிறார்கள் .
சினிமாவில் வெள்ளையாக இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வந்து குவியும். நான் கருப்பு அதனால் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. அது மட்டும் இல்லாமல் நான் கொஞ்சம் ரூடா கேள்வி கேட்பேன் என்பதால் பட வாய்ப்பு எனக்கு கிடைக்க விடாமல் செய்து விட்டார்கள்.
சுரண்டி படுக்க கூப்பிட்டார்:
அப்படித்தான் ஒருமுறை நாம் திரையில் பார்த்து பிரமித்துப் போன ஒரு இயக்குனரின் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் அங்கு சென்றிருந்தேன். அப்போது அவர் என் கையைப் பிடித்துக் குலுக்கி விரலால் சுரண்டி அட்ஜஸ்ட்மென்ட் ஓகேவா? வா என்று சிக்னல் கொடுத்தார் .
அது எனக்கு புரிந்து விட்டது. இருந்தாலும் எதுவும் பேசாமல் அவரை முறைத்துக் கொள்ளாமல் 10 நாள் தானே எப்படியாவது சூட்டிங் முடிச்சிட்டு போயிடலாம் என்று அமைதியாக இருந்தேன். கிடைக்கும் பட வாய்ப்புகளும் பறிபோய் விடக்கூடாது என நான் பொறுத்துக் கொண்டேன். இப்படி பெரிய இயக்குனர்களே சில நேரம் அசிங்கமாக பெண்களிடம் நடந்து கொள்கிறார்கள் அதுதான் உண்மை என காதல் பசுபதி அந்த பேட்டியில் மிகுந்த வேதனையோடு தன்னுடைய ஆதங்கத்தை கொட்டினார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.