கணவருடன் Backless-ல் Hot Pose கொடுத்து படகு ஓட்டும் வீடியோவை வெளியிட்ட கனிகா..!

7 July 2021, 9:44 pm
Quick Share

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா, தற்போது தனது கணவர், குழந்தையோடு பிலிப்பைன்ஸில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். மூன்று பேரும் சேர்ந்து படகு ஓட்டுவது போல இருக்கும் அந்த வீடியோவில், Backless உடை அணிந்த கனிகாவை தான் வச்ச கண்ணு வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

Views: - 448

3

0