மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ள கரீனா கபூர் – பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து

25 January 2021, 5:21 pm
Quick Share

பாலிவுட்டில் நட்சத்திர தம்பதிகள் ஏராளமானோர் உள்ளனர். அதில் முக்கியமானவர் சயீப் அலி கான் – கரீனா கபூர் ஜோடி. முன்னாள் கிரிக்கெட் வீரர் பட்டோடி – நடிகை ஷர்மிளா தாகூர் ஆகியோரின் மகனான சைப் அலிகான் ஏற்கனவே அமிர்தா சிங்கை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சாரா அலி கான் இப்ரஹிம் அலிகான் என ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு தன்னுடன் இணைந்து நடித்த கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார் சைப் அலிகான். இந்த ஜோடிக்கு ஏற்கனவே மூன்று வயதில் தைமூர் அலிகான் என்ற ஒரு மகன் இருக்கிறான். ஆனால் தற்போது இந்த ஜோடி அடுத்த குழந்தைக்கு தயாராகிவிட்டது. கொரோனாவால் சூட்டிங் இல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் இப்படி நடந்திருக்கும் என கலாட்டா பேச்சுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கரீனா கபூர் மீண்டும் கர்ப்பமாகி இருப்பதால் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அடுத்த குழந்தை, ஆணா? பெண்ணா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் கரீனா கபூர். இதை பார்த்த சினிமா துறையினர், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Views: - 16

0

0