கயல் ஆனந்தி கர்ப்பமா? வளைகாப்பு நடத்த தயாராகும் குடும்பத்தினர் !

Author: kavin kumar
15 August 2021, 2:22 pm
Quick Share

பொறியாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஆனந்தி. இந்தப் படத்தைத் தொடர்ந்து வந்த கயல் என்ற படமே அவருக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு கிடைத்தது. மேலும், சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டார். கயல் படத்தில் ஆனந்தியின் நடிப்பும், அவரது எக்ஸ்பிரசனும் காண்போரை வியக்க வைத்தது.

அறிமுக நடிகையானாலும், சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்த நடிகையைப் போன்று அவரது பாவணைகள் இருந்தது.அதனால் தான் என்னவோ அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது. கயல் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, ரூபாய், பண்டிகை, என் ஆளோட செருப்ப காணோம், மன்னர் வகையறா, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்று பல படங்களில் நடித்துள்ளார்.

எனினும், டைட்டானிக் காதலும் கவுந்து போகும், எங்கே அந்த வான், அலாவுதீன் அற்புத கேமரா, ஏஞ்செல், ராவண கூட்டம் மற்றும் ஜாம்பி ரெட்டி என்ற தெலுங்கு படம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், ஆனந்திக்கும் அலாவுதீன் அற்புத கேமரா படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் திருமணம் ஜனவரி மாதம் நடந்தது.

இந்நிலையில், கயல் ஆனந்தி கர்ப்பமாக உள்ளார் எனவும், அவரது குடும்பத்தினர் அவருக்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Views: - 734

23

5